திடீரென கோவிலை சுற்றி தீ பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே பொய்குணம் சாலையில் வேடியப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை சுற்றி சுமார் 600-க்கும் மேற்பட்ட மூங்கில் மரங்கள் உள்ளது. இந்த மரங்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அவ்வழியே சென்ற சிலர் இதுகுறித்து சங்கராபுரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 400-க்கும் மேற்பட்ட மரங்கள் தீயில் எரிந்து நாசமானது. ஆனால் சாமி சிலைகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை.