ஏஜிஎஸ் நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் கல்பாத்தியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் இன்று மாலை நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் வரும்பொழுது விஜய் வணக்கம் தெரிவித்தார். இதன்பின் விஜயிடம் நலம் விசாரித்த முதல்வர் அவரது குடும்பத்தினர் குறித்து கேட்டறிந்தார்.