அமெரிக்காவில் பலத்த சூறை காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்து வருவதால் அங்குள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அமெரிக்காவின் கரோலினாவில் உள்ள அலெண்டேல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியதால் அங்குள்ள வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. சூறைக்காற்றால் ஏற்பட்ட சேதத்தில் சிக்கி ஜார்ஜியா மாகாணத்தில் ஒருவர் கன்சாஸ் மாகாணத்தில் ஒருவர் என மொத்தமாக இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.
Categories