தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 2 வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 10, 11 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மே 6-ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும். அதன் பிறகு 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை பொதுத்தேர்வும் நடைபெறும்.
இதனையடுத்து 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறும். இந்நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை மே 13-ஆம் தேதி வரை வகுப்புகள் நடைபெறும். மேலும் அடுத்த கல்வி ஆண்டு அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 13-ஆம் தேதி தொடங்கப்படும். ஆனால் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றும் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கப்படும்.