சென்னையில் AC மெக்கானிக் ஆட்டோவில் கடத்தி சென்று கொல்லப்பட்ட சம்பவத்திற்க்கான cctv காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
சென்னை ஐஸ்ஹவுஸ் சாலையில் ராம்குமார் சென்ற நபரை ஆட்டோவில் மர்ம நபர்கள் கடத்தி சென்று கொலை செய்த நிலையில், அவரை ஆட்டோவில் கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடத்தப்பட்ட ராஜ்குமார் கோவளத்தில் உள்ள கல் குட்டையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதுவரை 5 பேரை கைது செய்துள்ள காவல்துறை அதிகாரிகள் முக்கிய குற்றவாளிகள் 6 பேரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் அவரை மர்ம நபர்கள் ஆட்டோவில் கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.