இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள சோலையழகுபுரத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகல்யா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நடத்த பெற்றோர் நிச்சயம் செய்துள்ளனர். இந்நிலையில் இன்று இவர்களது திருமணம் திருப்புவனத்தில் நடக்கவிருந்தது. இதனால் இரு தரப்பினரும் திருமண ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அகல்யா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அகல்யாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருமணம் செய்வதில் விருப்பம் இல்லாமல் அகல்யா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.