ஈஸ்டர் பண்டிகை நெருங்க உள்ள சமயத்தில் மேலை நாட்டவர்கள் சப்ரைஸ் எக்ஸ் எனப்படும் சாக்லேட் வகையை அதிகம் விரும்பி உண்பது வழக்கம். இந்நிலையில் Ferrero எனப்படும் சாக்லேட்டுகள் தயாரிக்கும் நிறுவனம் தங்களுடைய சாக்லேட்களில் சால்மோனெல்லா எனும் நோய்க் கிருமி பரவி இருப்பதாகவும் எனவே அதனை யாரும் உண்ண வேண்டாம் உடனடியாக திருப்பி கொடுத்துவிடுங்கள் எனவும் தங்கள் வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த சாக்லேட்டுகள் ஜெர்மெனி,பெல்ஜியம், பிரான்ஸ், பிரித்தானியா உட்பட பல நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே பிரித்தானியாவில் இந்த சாக்லெட்டில் உள்ள கிருமிகளால் நோய் தொற்று பரவி ஐந்து வயது குழந்தைகள் உட்பட 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Categories