மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேண்பாக்கம் பகுதியில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பாக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம் வருகிற 8-ம் தேதி காலை 10 மணி முதல் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படித்த அனைத்து இளைஞர்களும் கலந்து கொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கிறது.
இவர்கள் தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி நியமன ஆணையை வழங்குவார்கள். இந்த முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, சுய விவரக் குறிப்பு ஆகியவற்றை உடன் கொண்டு வர வேண்டும். இந்த முகாமில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது. எனவே படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ரகுல்நாத் தெரிவித்துள்ளார்.