கலைஞரின் எழுதுகோல் விருது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த இதழியலாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த இதழியலாளர்களுக்கு ரூபாய் 5 லட்சம் பரிசுடன் சான்றிதழும் வழங்கப்படும். இந்த விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இதனையடுத்து தமிழ் இதழியல் துறையில் குறைந்தது 10 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இந்தத் துறையில் இருப்பவர்கள் சமூக மேம்பாட்டிற்காகவும், வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பங்காற்றியிருக்க வேண்டும். அதன் பிறகு இவர்களுடைய எழுத்துக்கள் மக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இதற்கு மற்றொருவரின் பரிந்துரையின் பேரிலும், பணிபுரியும் அலுவலகத்தின் உதவியுடனும் விண்ணப்பங்களை அனுப்பலாம். இதற்கான கடைசி தேதி ஏப்ரல் 30 ஆகும். மேலும் விருதுக்கான விண்ணப்பங்களை செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை 600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.