Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ரூ5,00,000….. மலேசியாவில் சிக்கிய இளைஞர்….. மீட்டெடுத்த கலெக்டெர்க்கு காலில் விழுந்து நன்றி…!!

மலேசியாவில் கடத்தப்பட்ட நபரை பத்திரமாக மீட்ட  சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் கடத்தப்பட்ட இளைஞர் காலில் விழுந்து நன்றி தெரிவித்துள்ளார்.

நாமக்கல்  மாவட்டம்  குக்கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் வேலூரைச் சேர்ந்த நாகூர் கனி என்பவர் மூலம்   மலேசியாவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் விஸ்வநாதனை மலேசியாவில் ஆட்களை வைத்து கடத்திய நாகூர் கனி ஐந்து லட்சம் பணம் தர கூறி மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக விஸ்வநாதன்  பெற்றோர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரின் பேரில் ஆட்சியர் இந்திய தூதரகம் வாயிலாகப் எடுத்த நடவடிக்கையால் அவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு  சென்று மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். இந்த வீடியோ காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |