பள்ளிகளில் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. மேலும் ஊரடங்கு காரணமாக பொது தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அனைத்து மாணவர்களும் தேர்வு இல்லாமல் மதிப்பெண் மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றனர். தற்போது கொரோனா குறைந்த தாக்கம் குறையத் தொடங்கி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதால் இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்தப்படுமா? தேர்வுப் பட்டியல் எப்போது வெளியாகும் என மாணவர்களுக்கும் பெற்றோர்களும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு பொது தேர்வு நடக்கும் என உறுதி அளித்து பள்ளி கல்வி துறை அமைச்சர் பொது தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தேர்வுக்கு இன்னும் குறைவான நாட்களே இருக்கின்ற நிலையில் நடத்தி முடிக்க பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டால் என்ன செய்வது என மாணவர்கள் புலம்பி வருகின்றனர். ஆனால் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு நம்பிக்கை தரும் அளவிற்கு முக்கியமான தகவலை வெளியிட்டிருக்கிறார்.
பொதுத் தேர்வுகள் எழுத உள்ள மாணவர்களுக்கு முழுமையான பாடத்திட்டங்கள் நடத்தப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு நடத்தப்படாத பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்பது முறையானதாக இருக்காது. இதனை கண்டிப்பாக கவனத்தில் கொள்வோம் என கூறியுள்ளார். பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசித்து அதற்கான அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளரை சந்தித்து பேசிய அவர், ஒன்றிய அரசின் தேசியக் கல்விக்கொள்கையை ஆரம்பத்தில் இருந்தே எதிா்த்து வருகிறோம். மேலும் பிரத்யேகமாக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படுகிறது. தமிழக அரசு அமைத்துள்ள கல்விக்கொள்கை வடிவமைப்புக் குழுவில் சிறந்த வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர். எனவே மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக சிறந்த மாநில கல்விக் கொள்கையை இந்த குழு உருவாக்கும் என கூறியுள்ளார்.