பள்ளி ஆசிரியர்களை பீதியில் உறைய வைக்கும் புதிய அரசாணையை தமிழக அரசானது வெளியிட்டது,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் பரவத் தொடங்கியது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் இதன் காரணமாக விமானம், ரயில், பஸ் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா நோய் பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து 2021-22ம் கல்வி ஆண்டினை முன்னிட்டு 9ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் கடந்த செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 1ம் வகுப்பு முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு கடந்த நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதற்கிடையே உருமாறிய கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று தீவிரம் அடைந்ததன் காரணமாக, பள்ளிகளில் நேரடி வகுப்பு தடை செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டது.
மேலும், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என திடீர் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா நோய் பரவல் குறைந்ததையடுத்து, வழிபாட்டு தலங்கள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடு அதிரடியாக விலக்கி கொள்ளப்பட்டது. மேலும் பிப்ரவரி 1ம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றி பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றுள்ளது. இவ்விழாவில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் கலந்துகொண்டார். முன்னதாக ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் செய்தியாளர்களை சந்தித்து கூறியுள்ளதாவது, ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை புதிதாக பதவியேற்றுள்ள தமிழக அரசு படிப்படியாக நிவர்த்தி செய்வதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
எனவே பல்லாண்டு காலமாக ஆசிரியர்களின் கோரிக்கையான சிபிஎஸ்இ ரத்து மற்றும் பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கையை சட்டமன்ற கூட்டதொடரில் நிச்சயமாக 110 விதியில் அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை நாங்கள் அரசுக்கு வைக்கிறோம் என்று கூறியுள்ளார்.
மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இக்கோரிக்கையை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.மேலும் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்து இருக்கிறார்கள். ஆகவே தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.
அதனைப்போல் இணைய தளம், நெட் பிரச்சனையால் புள்ளி விபரத்தை காலையில் கொடுத்து 1 மணி நேரத்தில் வழங்க வேண்டும் என்ற பெரும் பிரச்சனை உள்ளது. எனவே புள்ளிவிபரம் தேவை என்றால் கணினியில் பட்டம் பெற்றவர்களை பகுதி நேர ஆசிரியர்களுக்கு, இப்பணியை வழங்கலாம்.
இதனை தொடர்ந்து 101 அரசாணை படி தொடக்கக் கல்வித் துறையை, தனித்துறை ஆக்கி முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் எனவும் 101 அரசாணையால் கோப்புகள் தேக்கம் அடைந்து ஆசிரியர்களின் முழு பண பயன் பெற முடியாமல் பாதிக்கப்படுகிறது. ஆகவே 101 அரசாணையை ரத்து செய்து, தொடக்கக் கல்வித் துறைக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.
மேலும் மாவட்ட கல்வி அலுவலர்களை நியமிக்க வேண்டும். மேலும், ஆசிரியர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள, ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் கூறியுள்ளார்.