மகர ராசி அன்பர்கள்,
இன்று திடீர் திருப்பங்கள் ஏற்படும் நாளாக இருக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். அன்பு நண்பர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். பயணத்தால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். உடல்நிலையில் அதிக அக்கறை காட்டுவீர்கள். இன்று திட்டமிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். துணிச்சலாக ஈடுபடுவீர்கள், வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் ரொம்ப எச்சரிக்கை வேண்டும்.
தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரிய பேச்சால் எதிலும் லாபம் காண்பார்கள். தேவையான உதவிகள் கிடைக்கும், எந்த ஒரு வேலையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுர்யமும் வாக்கு வன்மையும் இன்று அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல சிறப்பான முன்னேற்றம் இருக்கும். கூடுமானவரை படித்த பாடத்தை மட்டும் எழுதிப் பார்ப்பது ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6
அதிர்ஷ்டநிறம்: இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறம்