கிரீஸ் நாட்டில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வருகின்ற நிதி நெருக்கடியிலிருந்து மீண்டு வந்துள்ள கிரீஸ் நாட்டிற்கு கொரோனா பெருந்தொற்றல் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டு மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய அளவில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். பொது போக்குவரத்து இயங்காத காரணத்தால் பள்ளி மற்றும் மருத்துவமனைகள் செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.