நடிகை சமந்தா திடீரென தனது மேனேஜரை வேலையை விட்டு தூக்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமந்தாவும், நாக சைதன்யாவும் திருமணமாகி சமீபத்தில் விவாகரத்து பெற்றனர். இதற்குப் பின்னர் சமந்தா தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழில் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளிவர உள்ளது.
இதனைத் தொடர்ந்து தெலுங்கில் யசோதா, சகுந்தலம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் இந்தியிலும் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு பாலிவுட்டில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருவதால் புதிய மேனேஜர் ஒருவரை நியமித்து உள்ளாராம். முதலில் அவர் ஹாலிவுட் படங்களை மட்டும் கவனித்து வந்துள்ளார். பின்பு தென்னிந்திய மொழி படங்களையும் கவனிக்கும் பணியை அவரிடம் கொடுத்து விட்டாராம் சமந்தா. இதற்கு முன்னதாக சமந்தாவிடம் மகேந்திரன் என்பவர் மேனேஜராக இருந்து வந்துள்ளார். இவர் நாகசைதன்யா, சமந்தா இருவருக்குமே மேனேஜராக பணியாற்றி வந்துள்ளார். தற்போது இருவரும் பிரிந்து விட்டதால் மேனேஜரையும் மாற்றி உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.