மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வருகின்ற 20-ஆம் தேதி முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
எனவே நமது மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குறைகள் குறித்து நேரடியாக மனுக்களை அளித்து தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.