Categories
மாநில செய்திகள்

ரூ.10,000 + புத்தகங்கள் பரிசு…. பொதுமக்களுக்கு அதிரடி அறிவிப்பு…. உடனே இத பண்ணுங்க…!!!

தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அதனால் அதற்கான பணி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த கும்பலை கூண்டோடு பிடிக்கும் நோக்கில் மாவட்ட எஸ்பி வருண்குமார் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கஞ்சா விற்பனை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தகவல் அளிப்பவர்களின் பெயர், புகைப்படம் போன்ற இதர அடையாளங்கள் ரகசியமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |