தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி 2022 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்ப பதிவு ஏற்கனவே தொடங்கிய நிலையில் ஏப்ரல் 28-ஆம் தேதி கடைசி நாளாகும்.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் வேப்பேரி பெரியார் அகாதெமியில் ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை (காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை) மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044 2661 8056, 99406 38537 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் வேப்பேரியில் உள்ள அகாதெமியை நேரில் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.