தனுசு ராசி அன்பர்கள்,
இன்று தைரியத்தோடு செயல்படும் நாளாக இருக்கும். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். சகோதரர்கள் ஒத்துழைப்பால் பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். அரசு வழி அனுகூலம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். இன்று துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வாகனத்தில் செல்லும்போதும் பயணங்களின் போதும் கவனமாக இருங்கள். மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் ஏற்படும். கஷ்டமான பாடங்களையும் துணிச்சலாக முடிப்பீர்கள்.
வாகனத்தில் செல்லும்போது ரொம்ப கவனமாக நீங்கள் செல்ல வேண்டும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் தடைபடும், ஆனால் சரியான தீர்வு அதற்கு கிடைப்பதற்கான வழிகள் இன்று பிறக்கும். திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமான நிலையில் இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்