தமிழக ஆளுநர் ஆர் என் ரவி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி செல்ல உள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா மற்றும் கூட்டுறவு திருத்த சட்ட மசோதா ஆகியவை நிலுவையில் உள்ளதால் கடந்த வாரம் டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே தமிழக ஆளுநரை திரும்பப் பெறக் கோரி மக்களவையில் திமுக உறுப்பினர்கள் இந்தவாரம் அமளியில் ஈடுபட்டனர். தற்போது திடீரென தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்ல உள்ளார் .அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச உள்ளார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.