கூகுள் மேப் சூப்பரான அப்டேட் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. கூகுள் மேப் வசதி வந்தபிறகு சாலைகளை மக்கள் உள்ளூர்வாசிகள் இடம் கேட்டு தெரிந்து கொள்ளாமல், கூகுள் மேப்பை வைத்து அசால்டாக செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று வர முடிகின்றது. பல்வேறு சேவைகளை தனது செயல் மூலம் இந்த கூகுள் மேப் வழங்கி வந்தாலும், அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றது.
அந்த வகையில் தற்போது சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் எவ்வளவு என்பதை அறிந்து கொள்ளும் வசதியை கூகுள் மேப்ஸ் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் சாலை பயணத்தின்போது சுங்க சாவடிகள் இல்லாத வழிகளை தேர்வு செய்து பயணிக்கும் வகையில் அவாய்டு டோல்ஸ் என்ற ஆப்ஷனும் கொண்டு வரப்படுகின்றது. மேலும் டிராபிக் சிக்னல்களையும், சாலை நிறுத்தங்களையும் அறியும் வசதியும் இதில் சேர்க்க உள்ளதாக தெரிவித்துள்ளது.