Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஏரியில் தொப்புள் கொடியுடன் குழந்தை…. சடலமாக மிதந்த பெண்…. விசாரணையில் வெளிவந்த தகவல்….!!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியில் உள்ள பெரிய ஏரியில் நேற்று காலை தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தையும் ஒரு பெண்ணும் ஏரியில் பிணமாக கிடந்தனர். அதைப் பார்த்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் இறந்த பெண் மேல்மலையனூர் பகுதியை சேர்ந்தவர் என்றும் இவருடைய கணவர் 12 வருடங்களுக்கு முன் இறந்து போனதும் தெரியவந்தது.

கணவன் இறந்த பிறகு பலருடன் ஏற்பட்ட பழக்கத்தினால் இவர் கர்ப்பமாகி உள்ளார் எனவும் மேலும் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. பின்னர் போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணின் கணவரும் எச்ஐவி நோயால் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த பெண் இறந்ததன் காரணங்கள் குறித்து போலீசார் பல கோணங்களில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Categories

Tech |