Categories
அரசியல்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 6ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணம் செலுத்த மே 7 கடைசி நாளாகும். தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தேர்வு வாரியத்தில் இருந்து இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில பாடங்களில் சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1600, பொது EWS, OBE-NCL ரூ.1500, SC, ST, PWD மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 900 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு மாணவர்கள் https://neet.nta.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

Categories

Tech |