Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கல்யாணம் செய்து கொள்கிறேன்…. 8 ஆம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட வாலிபர்… போக்ஸோவில் தூக்கிய போலீஸ்..!!

மாணவியை கடத்தி பாலியல் தொல்லை செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், கலெக்டர் அலுவலக அலுவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் அழகர்சாமி என்பவருடைய மகன் அஜித்குமார் (23). இவர் குடிநீர் கேன் வினியோகம் செய்யும் நிறுவனத்தில் வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் தாடிக்கொம்பு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த எட்டாம் வகுப்பு மாணவிக்கும், அஜித் குமாருக்கும்  இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அந்த மாணவியிடம் கல்யாணம் செய்வதாக ஆசை வார்த்தைகளை கூறி அஜித் குமார் அவரை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இப்புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் முகமது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து அஜித்குமார் கைது செய்தார். இதையடுத்து மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார்.

Categories

Tech |