மொபட்டை திருடி சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அங்கலக்குறிச்சி பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆழியாறு வனத்துறை சோதனை சாவடி அருகே சர்பத் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் குணசேகரன் தனது கடைக்கு அருகில் மொபட்டை நிறுத்தி விட்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மொபட் காணாமல் போனதை கண்டு குணசேகரன் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து குணசேகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சோதனை சாவடியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது காவி நிற வேட்டி அணிந்த நபர் மொபட்டை திருடி கொண்டு வால்பாறை நோக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.