துலாம் ராசி அன்பர்கள்,
இன்று வரவு அதிகரிக்கும் நாளாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வந்து சேரும்.
கணவன் மனைவி இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதானமாக யோசித்து எடுப்பது நல்ல முடிவை தரும். சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம். தொலைபேசி தொடர்பாக சில புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு எந்தக் குறையுமே இல்லை. சுபநிகழ்ச்சிகள் இன்று இடம்பெறும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிகப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமல்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.
அதிர்ஷ்ட திசை:தெற்கு
அதிர்ஷ்ட எண்:4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்:சிவப்பு மற்றும் வெளிர் நீல நிறம்