Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

20 ரூபாயால் ஏற்பட்ட தகராறு….. ஹோட்டலை அடித்து உடைத்த நண்பர்கள்…. கோவையில் பரபரப்பு…!!

ஹோட்டலில் தகராறு செய்து பொருட்களை உடைத்த நண்பர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கே.என்.ஜி புதூர் பகுதியில் இருக்கும் ஹோட்டலுக்கு அதே பகுதியில் வசிக்கும் பிரதீப் என்பவர் மதுபோதையில் உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் 520 ரூபாய்க்கு சாப்பிட்ட பிரதீப் 500 ரூபாய் பணம் கொடுத்துள்ளார். அப்போது ஹோட்டல் ஊழியர் மீதமுள்ள 20 ரூபாய் பணம் எங்கே என கேட்டுள்ளார். இதற்குமேல் தன்னிடம் பணம் இல்லை என பிரதீப் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அருகில் இருந்தவர்கள் இரண்டு பேரையும் சமாதானப்படுத்தி பிரதீப்பை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் ஹோட்டல் மூடும் நேரத்தில் பிரதீப் தனது நண்பர்களுடன் சரக்கு வாகனத்தில் அங்கு சென்று காலியான மதுபாட்டில்களை ஹோட்டலுக்குள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும் ஹோட்டல் உரிமையாளரின் காரையும் அவர்கள் அடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஹோட்டல் கேஷியரான பழனிச்சாமி என்பவரை சக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரதீப், அவரது நண்பர்களான அஜித்குமார், கிருஷ்ணன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் 6 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |