Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆளில்லாத வீடு…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியை சேர்ந்தவர்கள்  செல்வம் ஈஸ்வரி தம்பதியினர்.  இவர்களுக்கு கௌசல்யா என்ற மகளும்  உள்ளார். செல்வம் கரூரில் தங்கியிருந்து தச்சு தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஈஸ்வரி வெளியூர் சென்றிருந்தார். இதனால் கௌசல்யா அருகில் உள்ள தனது உறவினர் வீட்டில் இரவு தூங்குவதற்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை செல்வம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைந்து தாறுமாறாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஈஸ்வரியிடம் தகவல் தெரிவித்தார். பின்னர் ஈஸ்வரி வீட்டிற்கு வந்து பார்த்தபோது தான் பீரோவில் வைத்திருந்த 5 3/4 பவுன் தங்க நகைகளும் மற்றும் 1 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பணமும் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  இதையடுத்து அருகில் உள்ள காவல்துறையில் தகவல் தெரிவித்து போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதில் மர்ம நபர்கள் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது. நகை வைத்திருந்த பையையும் ரசீதுகளையும் அருகில் உள்ள கிணற்றில் வீசிவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிச் சென்றுள்ளனர். பின்னர் கைரேகை பிரிவினர் சம்பவ இடத்திற்கு வந்து ரேகைகளை எடுத்து சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |