தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB), காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை (Taluk & AR) நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. தமிழகம் முழுவதும் சுமார் 444 காலி பணியிடங்களை நிரப்ப இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை (TNUSRB SI recuirement 2022) நடத்தப்படுகிறது. இதில், 399 காவல் துணை கண்காணிப்பாளர்கள் (தாலுகா) பதவிக்கும், 45 காவல் துணை கண்காணிப்பாளர்கள் (AR) பணியிடங்களும் நிரப்பப்படும். SI பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், இதற்கான தகுதி வரம்புகள் மற்றும் பிற விவரங்களை கீழே காண்போம்.
வேலைவாய்ப்புக்கான முழு விவரம்:
- நிறுவனத்தின் பெயர் – தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் வாரியம்.
- தேர்வின் பெயர் – TN போலீஸ் SI தேர்வு 2022.
- வேலை வகை – TN அரசு வேலைகள்.
- பணியிடம் – தமிழ்நாடு முழுவதும்.
- காலியிட எண்ணிக்கை – 444.
- விண்ணப்பமுறை – ஆன்லைன்.
- விண்ணப்ப செயல்முறை தொடக்க தேதி – 08.03.2022.
- விண்ணப்ப கடைசி தேதி – 07.04.2022
- அதிகாரப்பூர்வ இணையதளம் – tnusrbonline.org
இதற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி..
அறிவிப்பு வெளியிடப்படும் தேதியில் விண்ணப்பதாரர், பல்கலைக்கழக மானியக் குழு / அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் / பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இருப்பினும், மேலே உள்ள முறையைப் பின்பற்றாமல் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் மூலம் இளங்கலைப் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் தகுதி பெற மாட்டார்கள். மேலும் இது குறித்த தகவலுக்கு விண்ணப்பதாரர் இங்கே கிளிக் செய்வதன் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்.இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது ஜூலை 21 2022ஆம் தேதியின்படி குறைந்தபட்சம் 20 முதல் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 500 செலுத்த வேண்டும். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் காண தேர்வு செயல்முறையானது எழுத்துத்தேர்வை உள்ளடக்கியிருக்கும். அதனைத் தொடர்ந்து உடல் திறன் தேர்வு(PET) / உடல் அளவீட்டுத் தேர்வு (PMT) / சகிப்புத்தன்மை தேர்வு (ET) ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும். இதைத் தொடர்ந்து Viva- Voce நடைபெறும்.ழுத்துத் தேர்வின் பகுதி 1 தமிழ் மொழித் தகுதித் தேர்வு. தமிழ் மொழித் தகுதித் தேர்வு இயற்கையில் தகுதிபெறும் மற்றும் புறநிலை வகையாக இருக்கும்.
விண்ணப்பதாரர்கள் 100 கேள்விகளுக்கு 100 மதிப்பெண்களுக்கு பதிலளிக்க வேண்டும் மற்றும் தேர்வு காலம் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் ஆகும். அடுத்த கட்ட மதிப்பீட்டிற்குத் தகுதிபெற தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் கட்டாயம், ஆனால் தற்காலிகத் தேர்வுப் பட்டியலைத் தயாரிக்கும் போது கருத்தில் கொள்ளப்படாது. NCC, NSS அல்லது விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்களாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
முதலில் விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ இணையதளமான tnsurb.tn.gov.in ஐப் பார்வையிடவும். முகப்புப் பக்கத்தில், under Direct Recruitment of Sub-Inspectors of Police (Taluk & AR) – 2022 இன் கீழ் ஆன்லைன் விண்ணப்பம் என்பதைக் கிளிக் செய்யவும். இதையடுத்து, உங்களை பதிவுசெய்து விண்ணப்ப செயல்முறையைத் தொடரவும். பின்னர், தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, ஆவணங்களை இணைத்து, விண்ணப்ப கட்டணத்தைச் செலுத்தி படிவத்தைச் சமர்ப்பிக்கவும். எதிர்கால குறிப்புக்காக விண்ணப்பத்தை பிரிண்ட்அவுட் எடுத்துவைத்து நல்லது. இல்லையெனில், இங்கே கிளிக் செய்வதன் மூலம் விண்ணப்பத்திற்கான நேரடி ஆன்லைன் இணைப்பை பெறலாம்.
முதன்மை எழுத்துத் தேர்வில் பகுதி A (Main Written examination): பொது அறிவு மற்றும் பகுதி B: லாஜிக்கல் அனாலிசிஸ், நியூமெரிக்கல் அனாலிசிஸ், சைக்காலஜி தேர்வு, தகவல் தொடர்பு திறன், தகவல் கையாளும் திறன் ஆகியவை இருக்கும். எழுத்துத் தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 70 ஆகும். தேர்வர்கள் தேர்வை எழுத 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மற்றும் தகுதி பெற குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, Viva-Voce மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் வகுப்புவாரி இடஒதுக்கீடு மற்றும் மொத்த காலியிடங்களுக்கு உட்பட்டு பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தற்காலிகத் தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்படும்.
இது குறித்து மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்ணான 044-40016200 மற்றும் 044-28413658 ஆகிய தொலைப்பேசி எண் அல்லது 94990 08445 என்ற கைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.