அரசு பள்ளிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மாணவர் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களான சி.இ.ஓ.-க்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையின் இடைநிலை கல்வி பிரிவு இணை இயக்குனர் கோபிதாஸ் சார்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இருப்பதாவது, “அரசு பள்ளிகளுக்கு சொந்தமான இடங்களை சமூக விரோதிகள் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதன் காரணமாக மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளுக்கு இடையூறு நிலவுகிறது. அதுமட்டுமல்லாமல் பள்ளி தலைமை ஆசிரியர்களின் செயல்பாடுகளுக்கும், சமூக விரோதிகள் குந்தகம் விளைவிக்கின்றனர். ஆகவே அரசு பள்ளி இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டறிந்து அதனை அப்புறப்படுத்தி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.