தமிழகத்தில் இந்த ஆண்டு உயிரிழந்த காவலர்களின் விவரம் குறித்து வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உடல்நலம் பாதிப்பு, விபத்து, தற்கொலை போன்ற பல்வேறு காரணங்களால் 27 மாதங்களில் இதுவரை 836 காவலர்கள் இறந்துள்ளனர். இந்த வருடம் 78 காவலர்கள் இறந்துள்ளனர். மக்களை பாதுகாக்கும் காவல் பணியில் ஈடுபடுபவர்கள் மன அழுத்தத்தின் காரணமாகவும், குடும்ப பிரச்சனை காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 13 காவலர்கள் தற்கொலை செய்து இறந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த வருடம் விபத்தில் சிக்கி 19 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து புற்றுநோயால் 3 பேரும், உடல்நலக் குறைவால் 28 பேரும் உயிரிழந்தனர். மேலும் கடந்த 2020-ஆம் ஆண்டு 337 காவலர்களும், 2021 ஆம் வருடம் 414 காவலர்களும் உயிரிழந்தனர்.