Categories
தேசிய செய்திகள்

பென்சன் திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு…. வெளியான குட் நியூஸ்…..!!!!!

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் சார்பாக பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு மாத சம்பளத்திலிருந்து ஒரு தொகை பிடித்து வருகிறது. இத்தொகை அவர்கள் பெறும் ஊதியத்தை பொறுத்தது. இந்த தொகை பணிக்காலம் நிறைவடைந்த பிறகு மொத்தமாக அவர்களுக்கு திரும்பகிடைக்கும். ஆனால் இப்போது தேவைக்கேற்றவாறு தொகையை பணி காலத்திலேயே எடுத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது. எனினும் இந்த பிஎப் தொகையை முழுவதுமாக எடுத்தால் மட்டும்தான் அது ஊழியர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். இந்நிலையில் EPFO அமைப்பு பிஎப் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் மத்திய பிரதேச அரசு ஊழியர்களுக்கும் மகிழ்ச்சி செய்தி வந்துள்ளது. விரைவில் மாநில அரசு அவர்களின் தேசிய பென்சன் திட்ட நிலுவைத்தொகையைக் கணக்கிட்டு வழங்க இருக்கிறது. கடந்த 2005ஆம் வருடத்திற்கு பின் சேவையிலிருந்த அதிகாரிகள் வருடந்தோறும்  தேசிய பென்சன் திட்டத்தின் பலனைப் பெறவில்லை. இவ்விவகாரம் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி அமைச்சகத்தின் கவனத்துக்கு வந்தவுடன் 4-5 நாட்களில் இதற்கு தீர்வுகாண உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவால் சுமார் 4.5 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள் எனவும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது தேசிய பென்சன் திட்டத்தில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 14 சதவீத்தினை அரசாங்கமும், 10 சதவீதத்தை ஊழியரும் பங்களிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் அரசு வழங்கும் பங்கில் ஊழியர் பங்களிப்பும் சேர்க்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் தேசிய பென்சன் திட்டத்திற்கு அரசாங்கம் மூலம் 2500 கோடியும், ஊழியர் தரப்பில் இருந்து 1500 கோடியும் பங்களிக்கப்படுகிறது. சென்ற 17 வருடங்களில் இத்தொகை 30 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. அதன்பின் கருவூல அலுவலரால் சரிசெய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அவர் உடனே விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் 4-5 நாட்களில் தேசிய பென்சன் திட்ட நிலுவைத்தொகை ஊழியரின் கணக்கில் வந்துவிடும் என அறிவித்துள்ளனர்.

Categories

Tech |