Categories
உலக செய்திகள்

சீன விமானத்தின் 2 கருப்பு பெட்டிகள்….. பிரபல நாட்டிற்கு அனுப்பி வைப்பு…..!!!!!

சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரிலிருந்து குவாங்சூ நகருக்கு சென்ற மாதம் 21ஆம் தேதி புறப்பட்டது. இந்த நிலையில் குவாங்சூவிலுள்ள மலைப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதனால் விமானத்தில் பயணம் மேற்கொண்ட 123 பயணிகள், 9 ஊழியர்கள் என்று 132 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியாத சூழ்நிலையில், விமானத்தின் கருப்புபெட்டிகளை கண்டுபிடித்தால் மட்டுமே விபத்துக்கான காரணத்தை கண்டறிய முடியும் என்பதால் அதை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.
அந்த வகையில் விபத்து நடந்த சில தினங்களுக்கு பின் விமானத்தின் 2 கருப்பு பெட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் மீட்கப்பட்ட 2கருப்பு பெட்டிகளையும் ஆய்வு மேற்கொண்டு உண்மை நிலவரத்தை கண்டுபிடிக்க அவை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக சீனஅதிகாரிகள் தெரிவித்தனர். வாஷிங்டனிலுள்ள ஆய்வகத்தில் வைத்து அமெரிக்க நிபுணர்கள் கருப்பு பெட்டிகளை ஆய்வு மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. விபத்துக்குள்ளான விமானம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது என்பதனால் அந்நாட்டின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இந்த விசாரணையில் பங்கேற்றுள்ளதும், சென்ற வாரம் அமெரிக்க அதிகாரிகள் சீனா சென்று விசாரணை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |