உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக வெளியேறுங்கள் என்று துணை பிரதமர் வலியுறுத்தியிருக்கிறார்.
உக்ரைன் நாட்டின் மீது 42-ஆம் நாளாக ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. ரஷ்ய படைகள், உக்ரைன் நாட்டின் எரிபொருள் கிடங்குகளில் ஏவுகணை தாக்குதல் நடத்தி அழித்திருக்கிறார்கள். இந்நிலையில் உக்ரைன் நாட்டின் துணை பிரதமரான Iryna Vereshchuk, வெளியேறுவதற்கு வாய்ப்புகள் இருக்கும் சமயத்திலேயே நாட்டின் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வெளியேறி விடுங்கள் என்று கூறியிருக்கிறார்.
இதில், டொனெட்ஸ்க், கார்கிவ், லுஹான்ஸ்க் போன்ற பகுதியை சேர்ந்த மக்கள் உடனடியாக வெளியேறுங்கள் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் மக்கள் வெளியேறக்கூடிய மனிதாபிமான வழித்தடங்களையும் ரஷ்யா மேற்கொள்ளும் தாக்குதல்கள் துண்டித்து விடும் என்று எச்சரித்திருக்கிறார்.