மறைமுக தேங்காய் ஏலத்தில் கடந்த வாரத்தை விட இந்த தேங்காய் விலை குறைந்ததால் தென்னை விவசாயிகள் வேதனையடைந்துள்ள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமை அன்று தேங்காய் மறைமுகமாக ஏலம் விடுவது வழக்கம். இந்நிலையில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் விவசாயிகள் சுமார் 5,644 கிலோ தேங்காய்களை கொண்டு வந்துள்ளனர்.
இந்த ஏலத்தில் ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்சமாக 18 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 28 ரூபாய் வரை ஏலம் போனது. அதன்படி மொத்தமாக 1 லட்சத்தி 53 ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றுள்ளனர். மேலும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் தேங்காய் விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.