மக்கள் அரசு அலுவலகங்களை தேடி வராத அளவிற்கு திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2022-23 ஆண்டிற்கான பட்ஜெட் கடந்த மாதம் 18 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக 19ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை , வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த 26ஆம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கி உள்ளது. மேலும் 3 நாட்கள் நடைபெற்ற விவாதம் 24ஆம் தேதி நிறைவு பெற்றது.
இறுதி நாளன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார். இதனையடுத்து மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்கான திமுக சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வருகிற மே மாதம் பத்தாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதன்படி இரண்டாவது நாள் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போது கேள்வி நேரத்தின் போது பேசிய நன்னிலம் உறுப்பினர் காமராஜ் குடவாசலில் சார் கருவூல அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அரசு நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் எல்லாத்துறையிலும் செலவை கட்டுப்படுத்துவது போல எங்கள் துறைகளிலும் செலவை கட்டுப்படுத்துவது முக்கியம் அவர் கூறியுள்ளார். முடிந்த அளவிற்கு மக்கள் அரசு அலுவலகத்தை தேடி வரும் அளவிற்கு இல்லாத வகையில் திட்டம் தீட்டி வருவதாக தெரிவித்த அவர், வீடு தேடிக் கொடுக்கும் பணிகளில் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கட்டிடங்கள் கட்டுவது தொடர்பான ஏற்கனவே உள்ள திட்டங்களை செயல்படுத்தும் எனவும் புதிதாக கட்டிடம் கட்டுவதற்கு சிந்தித்து செயற்படுவோம் எனவும் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.