அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த நலத்திட்ட உதவிகளை தற்போதைய திமுக நிறுத்துவதாக குற்றம் சாட்டி விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே போராட்டம் நடந்தது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம், அம்மா மெடிக்ளினிக் மற்றும் அம்மா ஸ்கூட்டர் போட்ட திட்டங்களை ஆளும் திமுக அரசு முடக்கியது ஆக கூறி போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சிவி சண்முகம் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.