Categories
உலக செய்திகள்

தனியாளாக கெத்து காட்டிய உக்ரைன் டாங்கி… நிலைகுலைந்து போன ரஷ்யப்படைகள்…!!!!

உக்ரைன் நாட்டில் புகுந்த ரஷ்ய படைகளை T-64 என்ற வகை டாங்கி தனியாக சுட்டு வீழ்த்தியிருக்கிறது.

உக்ரைன் நாட்டின் நோவா பாசன் என்ற பகுதிக்குள் ரஷ்ய படைகள் வரிசையாக அத்துமீறி புகுந்துள்ளன. அப்போது உக்ரைனின் T-64 என்ற வகை தடுப்பு டாங்கியானது, ரஷ்ய படைகளை நோக்கி சுட்டு வீழ்த்தி அதிர செய்திருக்கிறது. அந்த டாங்கி தொடர்ந்து தாக்குதல் நடத்தி ரஷ்யாவின் 2 ஆயுதம் தாங்கிய வாகனங்களை அழித்திருக்கிறது.

திடீரென்று நடந்த தாக்குதல்களில் நிலை குலைந்து போன ரஷ்ய படைகள், எதிர் தாக்குதல் நடத்துவதற்கு தயாராக இருந்த போதும், எந்த இடத்திலிருந்து தாக்குதல் நடத்தப்படுகிறது என்பது தெரியாததால் உறைந்து போனார்கள். ஆனால் அந்த டாங்கி உஷாராக குடியிருப்பு கட்டிடத்தின் பின் பகுதியில் மறைந்திருந்து தாக்குதல் நடத்தி ரஷ்ய வாகனங்களை அழித்து விட்டது.

Categories

Tech |