Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம்க்கு போனபோது…. இருந்த 71,000 ரூபாய்…. அதிர்ச்சிக்கு பின் மெக்கானிக் எடுத்த முடிவு..!!

தனியார் வங்கி ஏ.டி.எம்.மில் பணம் செலுத்த போனபோது ரூ 71,000 இருந்ததை பார்த்து மெக்கானிக் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், வட ஆலப்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் சிவராஜ்(28). இவர் டி.வி மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி இரவு தனது கடையின் உரிமையாளர் ரவி ரூ 13,000 சிவராஜிடம் டெபாசிட் செய்வதற்கு கொடுத்துள்ளார். இதை அடுத்து சிவராஜ் திண்டிவனம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையத்திற்கு சென்று டெபாசிட் செய்வதற்கு எண்டர் பட்டனை அழுத்தினார்.

அப்போது பணம் செலுத்தும் சிறிய அறையில் பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவராஜ் அந்தப் பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்தார். அதில் ரூபாய் 71,800 ரூபாய் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிவராஜ் நேற்று முன்தினம் காலை தனது கடை உரிமையாளர் ரவி, மற்றும் அதிமுக பிரமுகர் மலர்சேகர் ஆகியோருடன்  திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தாவிடம் அந்தப் பணத்தை சிவராஜ் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து சிவராஜின் நேர்மையை போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா மற்றும் குற்றப்பிரிவு காவல்துறையினர் பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |