Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பான்கார்டுக்கு இந்த தகவல் வேணும்…. ஆன்லைனில் நூதன மோசடி…. ஏமாந்த பெண்….!!

ஈரோடு மாவட்டம் பெரியார் நகரை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் இவருடைய மனைவி பீனா. சில நாட்களுக்கு முன் இவர்களுடைய கைப்பேசிக்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதை பீனா வாசித்து பார்த்துவிட்டு அதில் பேன்கார்ட்டில் புதிய தகவல்களை இணைக்க குறிப்பிட்ட தகவல்களை உள்ளிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. அதில் கேட்கும் விவரங்கள் அனைத்தையும் பீனா பூர்த்தி செய்து வந்தார். இறுதியில் ஓடிபி எண் கொண்ட குறுஞ்செய்தியையும் அளித்துள்ளார்.

சிறிது நேரத்தில் தனது வங்கி கணக்கில் இருந்த 1  லட்சத்து 67 ஆயிரத்து 920 ரூபாய் எடுக்கப்பட்டதாக வந்த மெசேஜை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீனா வங்கி அதிகாரியிடம் போய் முறையிட்டு பார்த்தபோது தான் மோசடி கும்பலிடம்  ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்தார். இதுகுறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுக்க வழக்குப்பதிவு செய்து அந்த மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Categories

Tech |