இன்றைய பஞ்சாங்கம்
22-01-2020, தை 08, புதன்கிழமை,
இராகு காலம் மதியம் 12.00-1.30,
எம கண்டம் காலை 07.30-09.00,
குளிகன் பகல் 10.30 – 12.00,
சுப ஹோரைகள் :
காலை 06.00-07.00,
காலை 09.00-10.00,
மதியம் 1.30-2.00,
மாலை 04.00-05.00,
இரவு 07.00-09.00, 11.00-12.00
மேஷம் :
இன்று உங்களுக்கு பணவரவு அளவாகவே இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் வரக்கூடும். உங்கள் இல்லத்திற்கு உறவினர்களின் வருகையால் சுபநிகழ்ச்சிகள் நடைபெறகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்திருந்த இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்புகள் அமையும். தெய்வீக வழிபாடு நன்மையை கொடுக்கும்.
ரிஷபம் :
இன்று தேவையற்ற மனக்கவலைகள் இருக்கும். உங்களின் ராசியில் இன்று சதிராஷ்டமும் இருப்பதால் எவரையும் நம்பி எந்த பொறுப்பையும் கொடுக்காமல் இருப்பது சிறந்தது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். வாகனத்தில் பயணிக்கும் பொழுது பொறுமை அவசியம்.
மிதுனம் :
இன்று எதிர்பாராத திடீர் தனவரவு குடும்பத்தில் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடங்கல்கள் அகலும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்க பெறுவீர்கள். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்திருந்த இடமாற்றம் வாய்க்கும். கொடுத்த கடன்பணம் இன்று வசூலாகும்.
கடகம் :
இன்று உறவினர்களிடம் இருந்து மனம் மகிழும் செய்தி வந்து சேரும். பிள்ளைகள் தம் பொறுப்புகளை அறிந்து செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையுடன் பணிபுரிவர்கள். பூர்வீக சொத்துகளினால் அனுகூலம் இருக்கும். ஆன்மீக காரியங்களில் அதிகரிக்கும்.
சிம்மம் :
இன்று மகிழ்ச்சியான செய்திகள் வீடு தேடி வந்துசேரும். திருமண தொடர்பான சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிள்ளைகள் உங்களிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள். தொழில் ரீதியாக அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல்கள் லாபகரமாக இருக்கும். புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகும்.
கன்னி :
இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினை உண்டாகும். பிள்ளைகள் உடல் நலனில் சிறு பாதிப்புகள் ஏற்படகூடும். நண்பர்களிடம் வீண் வாக்குவாதங்கள் வரலாம். உடன் இருப்பவர்ளை அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். தொழிலில் பங்குதாரர்களின் ஆலோசனையால் முன்னேற்றம் ஏற்படலாம்.
துலாம் :
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்துவதற்கு சிறந்த நாளாக அமையும். விலை உயர்ந்த பொருட்களினை வங்கி ஆனந்தம் அடைவீர்கள். சுபகாரிய முயற்சிகள் யாவும் நல்ல பலனை கொடுக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கேட்காமலே கிடைக்கும்.
விருச்சிகம் :
இன்று குடும்பத்தில் பணவரவு கொஞ்சம் சுமாராக தான் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமாகும். உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எந்த ஒரு செயலையும் பொறுமையாக செய்ய வேண்டும். சிந்தித்து செயல் படுவதன் மூலம் நற்பலன்களை அடையலாம். கொடுத்த கடன் இன்றே வசூலாகிவிடும்.
தனுசு :
இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில்எதிர்பாராத முன்னேற்ற நிலை இருக்கும் . குடும்பத்தில் பிள்ளைகளுக்காக சுப செலவுகள் ஏற்படளாம். பணவரவு அதிகமாக இருப்பதால் இன்று வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் தீரும்.
மகரம் :
இன்று குடும்பத்தில் பொருளாதார தொடர்பான நெருக்கடிகள் கொஞ்சம் ஏற்படலாம். உறவினர்களிடம் வீண் பிரச்சினை உண்டாகும் வாய்ப்பும் உள்ளது. எடுக்கும் முயற்சியில் சிறிய தடங்கலுக்குப் பின்னர் வெற்றி கிட்டும். பயணஙகளால் அனுகூலம் ஏற்படும். தெய்வீக வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும்.
கும்பம் :
நீங்கள் இன்று எந்த ஒரு செயலிலும் மனநிறைவுடன் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருக்கும் . ஆடை, ஆபரணம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கு தகுந்த ஊதியம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடி வரும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடக்கும்.
மீனம் :
இன்று உங்களது முயற்சிகள் அனைத்துமே வெற்றியை தரும் அளவில் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். உடன் பிறந்தவர்களுடன் சுமூகமான உறவு ஏற்படும். பிள்ளைகளின் செயல்களில் நல்ல ஒரு மாற்றங்கள் ஏற்படும். அனுபவசாளிகளின் ஆலோசனையால் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.