வரும் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் (25% இட ஒதுக்கீட்டில்) மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி மாணவர்கள் http://rte.tnschools.gov.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுமார் 1.12 லட்சம் இடங்கள் உள்ளன. RTE சட்டத்தின்படி LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை எவ்வித கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளிகளில் சேரலாம். எனவே மாணவர்கள் இந்த அறிய வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.