Categories
அரசியல்

HP Omen 16 லேப்டாப்…. என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கு?…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

HP இந்திய சந்தையில் தனது புதிய கேமிங் லேப்டாப் HP Omen 16-ஐ அறிமுகம் செய்துள்ளது. Intel 11th Gen செயலியுடன் HP Omen 16 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த HP Omen 16 லேப்டாப் 16 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த லேப்டாப் பழைய மறுசுழற்சி செய்யப்பட்ட பாகங்களில் இருந்து தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்பின் ஆரம்ப விலை ரூ.1,39,999 ஆகும். HP இன் ஆன்லைன் ஸ்டோரில் லேப்டாப்பை வாங்க முடியும்.

HP OMEN 16-ன் சிறப்பம்சம் :-

* இந்த லேப்டாப் 165Hz புதுப்பிப்பு வீதத்துடன் 16.1 இன்ச் குவாட் HD டிஸ்பிளே கொண்டுள்ளது.

* மேலும் இதனுடன் 100% sRGB வண்ண வரம்புக்கு ஆதரவு உள்ளது.

* இதோடு ISafe Flickr பாதுகாப்பும் கிடைக்கும்.

* இந்த லேப்டாப் 11வது Gen Intel Core i7-11800 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது.

* இது 8GB VRAM மற்றும் Nvidia GeForce RTX 3070 GPU கிராபிக்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கியது.

* SSD ஸ்டோரேஜ்கக்கான PCIe Gen4 x4 ஸ்லாட் மற்றும் 16ஜிபி வரை DDR4 3200MHz ரேம் இந்த லேப்டாப்பில் உள்ளது. 1TB SSD சேமிப்பு இதன் மூலம் கிடைக்கும்.

* இந்த லேப்டாப் ஒரு புதிய ஃபேன் பிளேடை கொண்டுள்ளதால் குளிர்ச்சியைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

* 83Whr பேட்டரி இந்த லேப்டாப்பில் உள்ளது. இதன் பேக்கப் ஒன்பது மணிநேரம் ஆகும்.

Categories

Tech |