விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன், வருவாய் அலுவலர் சிதம்பரம், வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஹேமா நிர்மலா, விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் விவசாயிகள் ஒவ்வொரு மாதமும் தவறாமல் கூட்டத்தை நடத்த வேண்டும். மேலும் வல்லக்கோட்டை ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற வேண்டும் எனவும்,பருத்தி சாகுபடிக்கு ஏற்ற வகையில் யூரியா வழங்க வேண்டும், விவசாய திட்டங்கள் தற்போது இணையதள முறையில் இருப்பதால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
எனவே பழைய நடைமுறையில் விவசாய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் 1 லட்சத்து 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால் 1 லட்சத்து 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சாகுபடி பரப்பை விட கூடுதலாக 17 ஏக்கர் பயிர்காப்பீடு செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே விவசாயிகள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்தாள் மட்டுமே முடியும என மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.