ஈரோடு மாவட்டம் ஒத்தக்குதிரை பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். இவர் சத்தியமங்கலம் நகராட்சியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் ஒத்தக்குதிரை பகுதியில் உள்ள ஏடிஎம் ஒன்றில் நேற்று முன்தினம் பணம் எடுக்கச் சென்றுள்ளார். இந்நிலையில் ஏதோ வாடிக்கையாளர் கார்டை செருகி 10,000 எடுக்க முயன்றுள்ளார்.
ஆனால் பணம் வராததால் அப்படியே விட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் போன பிறகு ரூபாய் 10000 வந்துள்ளது. அந்த சமயத்தில் வேலாயுதம் பணம் எடுக்க சென்றபோது அதில் ஏற்கனவே பணம் வந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அதை எண்ணிப் பார்த்தபோது ரூபாய் 10000 இருந்ததை அறிந்ததும் யாராவது விட்டு சென்றனரா என்று எண்ணி அக்கம் பக்கத்தில் தேடி பார்த்துள்ளார்.
யாருமில்லாத காரணத்தினால் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று சப்-இன்ஸ்பெக்டர் வசந்த குமாரிடம் ரூபாய் 10 ஆயிரத்தை ஒப்படைத்துள்ளார். வேலாயுதத்தின் இந்த செயலை காவல்துறையினர் பாராட்டியுள்ளனர்.