ரியல் மீ நிறுவனம் தனது நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போனுக்கு இனி சார்ஜர் வழங்கப்படாது என்று அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் சார்ஜர் வழங்குவதை நிறுத்தி நிலையில் தற்போது ரியல்மீ நிறுவனம் அறிவித்துள்ளது. சார்ஜர் பயன்பாடு தற்போது குறைந்தால் கார்பன்-டை-ஆக்சைடு வெளியிடப்படுவது குறையும் என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சார்ஜர் வழங்கப்படுவது நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.
சார்ஜர் வழங்கப்படாதது மூலமாக ஸ்மார்ட்போன்களின் விலை மேலும் குறைக்கப்பட்ட கூடுதல் சலுகை உடன் வழங்கப்படும் என அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அது மட்டுமல்லாமல் எல்லா ரியல்மி ஸ்மார்ட் போன்களுக்கும் சார்ஜர் நிறுத்தப்படவில்லை. நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலின் விற்பனை மற்றும் பயனர்களின் தரும் ஆதரவை பொறுத்து பிற போன்களுக்கு சார்ஜ் வழங்குவது நிறுத்தம் என ரியல்மி நிறுவனம் கூறியுள்ளது.