Categories
உலக செய்திகள்

விளாடிமிர் புடினின் மகளுக்கு புதிய தடைகள்…. அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு…!!!

அமெரிக்க அரசு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மகள்களுக்கு புதிதாக தடைகளை அறிவித்திருக்கிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மகள்களான மரியா புதினா, கேட்டரினா டிக்கோனோவா ஆகியோரை குறிவைத்து அமெரிக்கா புதிதாக தடைகளை அறிவித்திருக்கிறது. அந்தவகையில் விளாடிமிர் புடினின் மகள்கள், அமெரிக்க நிதி அமைப்பில் பரிமாற்ற நடவடிக்கைகள் எதையும் செய்ய முடியாது.

இவர்கள் மட்டுமன்றி அந்நாட்டின் பிரதமர் மிகைல் மிசுஷ்டின், வெளியுறவு மந்திரியான செர்ஜி லாவ்ரோவின், அவரின் மனைவி மற்றும் குழந்தைகள், முன்னாள் அதிபரான டிமிட்ரி மெட்வடேவ் உட்பட பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் அனைவரையும் அமெரிக்கா, தன் தடை பட்டியலில் வைத்திருக்கிறது.

இவர்கள் அனைவருக்கும் அமெரிக்காவில் இருக்கும் சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கிறது. அந்த சொத்துக்களை அவர்கள் பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |