ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடின், அவரது லட்சியத்தை மாற்றியிருப்பதற்கான அறிகுறிகள் கிடையாது என்று நேட்டோ தலைவர் கூறியிருக்கிறார்.
நேட்டோவின் பொதுச் செயலாளரான ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், வெளியுறவுத் துறை அமைச்சர்களின் இரண்டு நாட்கள் கூட்டத்தில் நேற்று தெரிவித்ததாவது, ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடின் அவரின் இலட்சியத்தை மாற்றியதாக எந்த வித அறிகுறிகளையும் நாங்கள் பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
உக்ரைன் நாட்டில் நடக்கும் கடும் போர் தொடர்பில் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் உரையாற்றியிருக்கிறார். மேலும் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டை மொத்தமாக கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச ஒழுங்கை மீண்டும் மீறியிருக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.