Categories
உலக செய்திகள்

தொடர்ந்து அத்துமீறும் ரஷ்ய ராணுவம்…. வசமாக சிக்கிய சிசிடிவி ஆதாரம்…!!!!!

உக்ரைனின் சாலையில் நடந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது ரஷ்ய  ஆக்கிரமிப்பாளர்கள் தாக்குதல் நடத்தி இருக்கும் சிசிடிவி காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனில் புச்சா நகரில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய ராணுவம் அங்கிருந்த பொது மக்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்திருப்பதாக உக்ரைன் அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி உள்ளது. மேலும் ரஷ்ய ராணுவத்தின் இந்த அத்துமீறலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் பொருளாதார தடைகளை விதித்து ரஷ்யாவின் செயலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஆனால் உலக நாடுகள் மற்றும் உக்ரைனின்  குற்றச்சாட்டுக்கு ரஷ்யா தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கிறது. இந்த நிலையில் உக்ரைனின் செவரோடோனெட்ஸ்க் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது ரஷ்யா ஆக்கிரமிப்பாளர்கள் தாக்குதல் நடத்தி இருக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உலக நாடுகளை மேலும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இந்த காணொளி காட்சியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நபர்கள் ராணுவத் துருப்புகள் வருகையை கண்டு அலறி அடித்துக்கொண்டு ஓடவே அவர்கள் மீது ரஷ்ய ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். மேலும் ரஷ்ய ராணுவத்தின் இந்த தாக்குதல் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி ரஷ்யாவின் போர் விதிகளுக்கு எதிராக சாட்சியாக மாறி இருக்கிறது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |