Categories
மாநில செய்திகள்

சென்னை டூ சேலம் பசுமை வழிச்சாலை திட்டம்…. வெளியான முக்கிய தகவல்…..!!!!!

சென்னை டூ சேலம் இடையேயான பசுமை வழிச் சாலை திட்டத்தினை 2024ஆம் வருடத்திற்குள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டு இருப்பதாக மத்திய அரசானது தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக மாநிலங்களவையில் பதில் அளித்து பேசிய மந்திரி நிதின் கட்காரி, நாடு முழுதும் ரூபாய் 3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப் பீட்டில் 8,301 கி.மீ நீளமுள்ள 22 பசுமை வழிச்சாலை திட்டங்கள் அமைக்க இருப்பதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் சென்னை டூ பெங்களூரு மற்றும் சென்னை டூ சேலம் இடையில் 2 பசுமை வழிச்சாலைகள் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பதாகவும், இவற்றில் சென்னை டூ பெங்களூரு இடையில் 282 கிமீ நீளமுள்ள சாலை அமைக்கும் பணிகளில் 45 கிமீ நீளமுள்ள சாலையமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சென்னை டூ சேலம் இடையில் 277 கிலோ மீட்டர் நீளமுள்ள பசுமைவழிச்சாலை அமைக்கும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என கூறிய அவர், வருகிற 2024-ம் வருடத்திற்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |